என்எல்சி மூன்றாவது சுரங்க விரிவாக்கத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

என்எல்சி மூன்றாவது சுரங்க விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே தர்மநல்லூர் கிராமத்தில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, விவசாய நிலங்களில் இருந்து ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், வரும் காலங்களில் இந்த பகுதியில் சுரங்கங்கள் மட்டுமே இருக்கும் என்றும் மனிதர்கள் இருக்க மாட்டார்கள் என்றார். கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நாம் கையேந்த வேண்டிய நிலையில் அவர்கள் தரும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விதைத்து, அதிலிருந்து விளையும் பொருட்களை உட்கொள்ளும் நமக்கு எதிர்கால சந்ததியே இல்லாத நிலை ஏற்படும் என்றும் அய்யாக்கண்ணு கூறினார்.

Exit mobile version