கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் அமைந்துள்ளது. இந்நிறுவனம் அவர்களின் கட்டமைப்பிற்காக சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் இதர கிராம மக்களிடம் இருந்து நிலங்களைப் பெற்றுள்ளது. நிலங்களின் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகையும் வேலைவாய்ப்பு அமைத்து தருவதாகவும் நிறுவனத்தினர் வாக்குறுதி அளித்திருந்தார்கள். மேலும் இதனை சரிவர என்.என்.சி நிறுவனத்தினர் கடைபிடிக்காமல் தட்டிக் கழித்த வண்ணம் இருந்துள்ளார்கள். சொந்த நிலங்களை வழங்கியவர்களுக்கு சரியான இழப்பீட்டுத் தொகையும் வேலைவாய்ப்பினையும் தராமல் அலைக்கழிப்பதாக தொடர்ந்து புகாரானது எழுந்த வண்ணம் உள்ளது.
இத்தகைய தொடர் புகாரினையொட்டி, கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி கிராமத்தில் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்ற ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விடியா அரசின் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். எட்டு மணி நேரமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் என்எல்சிக்கு நிலம் வழங்கிய விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை, ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு ஆகிய கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். இந்த விடியா அரசு இது குறித்து எவ்விதமான உத்திரவாதமும் கொடுக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் விவசாயிகள் வெளியேறினர். மேலும், அமைச்சர், அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் திமுகவினர் ஏராளமானோர் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் விவசாயிகளுக்கு நேரவிரத்தினையும் தேவையற்ற மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளார்கள்.