மேடை கிடைச்சா போதுமே… இஷ்டத்துக்கு உளறிக்கொட்டிய உதயநிதி!

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற அரசு தான் விடியா அரசு என பேசியுள்ளார் வாரிசு அமைச்சர் உதயநிதி. மேடையும், மைக்கும் கிடைத்தால் போதும் உண்மையை மறைத்து, என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற தனது தாத்தா, அப்பாவின் வழித்தடத்திலேயே உதயநிதியும் பயணிக்கிறார் போல…

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கட்சி நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் வாரிசு அமைச்சர் உதயநிதி பங்கேற்றார். மேடைக்காகவும், மைக்கிற்காகவுமே காத்திருந்ததுபோல மேடை ஏறியதும் அள்ளிவிடத் துவங்கினார் உதயநிதி. திமுக ஆட்சியில் தான் ஆணும், பெண்ணும் சமமாக நடத்தப்பட்டதாகவும், மகளிருக்கு சம உரிமை வழங்கும் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டதாக அள்ளிவிட்டார். மகளிருக்கு இலவச பேருந்துகள், மகளிர் உரிமைத் தொகை திட்டம் என செயல்படாத திட்டங்கள் குறித்து பெருமை பாராட்டிக் கொண்டிருந்தார்.

மாங்கு மாங்கென பெருமை பாராட்டும் திட்டங்களைத் தான் ஓசி என திமுக அமைச்சர்களே கிண்டல் அடித்ததை மறந்துவிட்டார் போல உதயநிதி. பெண்களுக்கு சம உரிமை, பாதுகாப்பு என்கிறார். ஆனால், விடியா ஆட்சியில் கனிமொழி பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பெண் போலீஸுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது, கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என விடியா திமுகவின் பெண் நிர்வாகி ஒருவர் மேடையிலேயே பேசினாரே அதையெல்லாம் மறந்துவிட்டாரா உதயநிதி. இவ்வளவு பெண் உரிமை, சம உரிமை பேசும் உதயநிதியால், கனிமொழிக்கு கட்சியில் கொடுக்கப்பட்டுள்ள இடம் குறித்து வெளிப்படையாக பேச முடியுமா? அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு என பார்த்து பார்த்து செய்த முத்தான திட்டங்களை முடக்கியதைத் தவிர, விடியா ஆட்சியில் எவ்வித சாதனைகளையும் திமுக செய்யவில்லை என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Exit mobile version