தனித்தீவில் தனி சாம்ராஜ்யம் நடத்தி வரும் நித்தியானந்தாவை கைது செய்ய குஜராத் காவல்துறையினர் புளு கார்னர் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
பாலியல் குற்றச்சாட்டு, கடத்தல் புகார்களில் சிக்கி உள்ள நித்தியானந்தா ஈக்வடார் நாட்டிற்கு சொந்தமான தீவை விலைக்கு வாங்கி அங்கு தங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நித்தியானந்தாவை பிடிக்க தீவிரம் காட்டி வரும் குஜராத் காவல்துறையினர், இன்டர்போல் உதவியை நாடியுள்ளனர். இதற்காக அகமதாபாத் காவல்துறையினர் கடிதம் ஒன்றை சிஐடி-க்கு அனுப்பி உள்ளனர். அதில், நித்தியானந்தாவை கைது செய்ய இன்டர்போல் உதவியை நாட வேண்டும் எனவும், இதற்காக புளு கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கவும் பரிந்துரைத்துள்ளனர். குற்றம் செய்து விட்டு வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் விடப்படும். இதற்கு அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டில் குற்றவாளி இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். குற்றவாளி எந்த நாட்டில் பதுங்கி உள்ளாரோ அந்த நாட்டின் காவல்துறையினரை அவர் பிடித்து ஒப்படைக்க வேண்டும். தற்போது புளு கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் நித்தியானந்தாவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.