கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நித்யானந்தாவின் ஜாமீனை ரத்து செய்ய கோரும் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட நித்யானந்தாவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியபோதிலும், வழக்கு விசாரணைக்காக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இந்நிலையில், நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய கோரி லெனின் கருப்பன் என்பவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிவடைந்ததையடுத்து, வழக்கின் தீர்ப்பு வரும் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது.
நித்யானந்தா தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்து அழைத்து வர ‘புளு’ கார்னர் நோட்டீசு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.