கொரோனாவைக் கொல்ல ஓர் எளிய வழி என்று, ஆத்மலிங்கத்தை வைத்து “கை வைத்தியம்” சொல்லும் வீடியாவால் வலைதளத்தில் வளைய வந்து சிக்கிக்கொண்டிருக்கிறார் சிரிப்பு சாமியார் நித்யானந்தா….
கொரோனா பெருந்தொற்று சுற்றிச் சுழன்று அடித்துகொண்டிருக்க, என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்துகொண்டு நிற்கிறது பல வல்லரசு நாடுகள்… எதாவது மருந்து கண்டுபிடிக்கப்படாதா? தடுப்பூசிகள் உண்மையாலுமே பயனளிக்கிறதா? என்று அறிவியல் அறிஞர்கள் தங்கள் உயிரைப்பணயம் வைத்து ஆராய்ச்சி செய்துகொண்டிருக்க, உலகின் எங்கோ ஓர் மூலையில் கேமிராவை வைத்து வித்தை காட்டிக்கொண்டிருக்கும் கண்டென்ட்களின் கோமான் நித்தியானந்தா மீண்டும் என்ட்ரீ கொடுத்திருக்கிறார்…
அடிதாங்க இடிதாங்க அடிபொடிபொட்டிக்களையயய என்று, அடிக்கும்போது வலிக்காமல் இருக்கும் மந்திரம்போல, கொரோன கொடுந்தொற்று நமது நுரையீரலுக்குள் நுழையாமல் gate போட்டு நிறுத்த வேண்டுமா? அப்படீன்னா நீங்க செய்யவேண்டியது இததான் என்று யூடியூப் இன்டிபெண்டன்ட் கன்டென்ட் கிரியேட்டராக மாறி, ஆன்ம லிங்கத்தை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு கை வைத்தியம் செய்யுங்கள் என்று சொல்லி வயிரு குலுங்க சிரிக்க வைக்கிறார் சிரிப்பு சாமியார் நித்தியானந்தா… .
கொரோனாவை நுரையீரலுக்குள் நுழையவிடாமல் தடுக்கும் செக்யூரிட்டி செக்போஸ்ட் ஐடியாவை கொடுத்து அசரவைத்த கை வைத்திய சாமியார் நித்தி, அதே வாயில் புதிதாகப் பரவும் கரும்பூஞ்சை நோய்க்கும் வழி சொல்லியிருக்கிறார்… நவபாஷாணத்தின் மீது பொழியப்பட்ட பாலும், நீரும், வேம்பு ரசம் ஆகியவையே கரும்பூஞ்சை நோய்க்கு மருந்து என்று சொல்லி பின்லேடன் வீட்டுக்கு வழிகேட்கும் வடிவேலுக்கு மீண்டும் டஃப் கொடுத்திருக்கிறார்..
அட இதுதெல்லாம் என்ன பிரமாதம், மெயின் அயிட்டம் ஒன்னு இருக்கு என்ற அளவுக்கு இந்த கரும்பூஞ்சை நோய் மனிதன் மீது நடத்தப்படும் உயிரியல் போர் என்று இன்டெர்போல் உளவுத்துறைக்கே சவால்விடும் அளவிற்கு துப்பறியும் சாம்புவாக கண்டெண்ட்களை தூவிக்கொண்டிருக்கிறார்….
அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட, அரசால் அங்கீரிக்கப்பட்ட தடுப்பூசிகள் மீதான அச்சத்தைப்போக்கவே அரசு படாத பாடு பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் இப்படி வீடியோக்களின் வாயிலாக மக்களின் அச்சத்தை அதிகரிப்பதோடு, தவறான சிகிச்சை முறைகளைச் சொல்லி மக்களை ஆபத்தில் தள்ளும் இந்தச் சாமியார் நித்தியின் மீது பெருந்தொற்று நோய்த்தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பாய்ந்தால்தான் அவர் கையில் வைத்து தியானம் செய்த ஆத்மலிங்கத்திற்கே ஆத்ம திருப்தியாய் இருக்கும் என்று கமெண்டுகின்றனர் நித்தியின் வீடியோவை பார்த்தவர்கள்…