கோவை அருகே ஆண்டிற்கு ஒருமுறை பூக்கும் நிஷாகாந்தி பூக்கள், பார்வையாளர்களை கவர்கிறது

கோவை உருமாண்டம்பாளையத்தில் ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் நிஷாகாந்தி பூக்களை பொதுமக்கள் ஆவலுடன் பார்த்து செல்கின்றனர்.

உருமாண்டம்பாளையம் பகுதியில் வசித்து வரும் பாலாஜி என்பவரின் வீட்டின் முன் பிரம்மகமலம் என்று அழைக்கப்படும் நிஷாகாந்தி பூக்கள்
மலர்ந்துள்ளன. நிஷாகாந்தி மலர்கள் இரவு 8 மணி அளவில் மொட்டு விடத் தொடங்கி நள்ளிரவு 12 மணியளவில் மலர்ந்து அதிகாலையில் வாடும் தன்மை கொண்டது. இந்த பூவின் கொடியை பிரம்மனனின் நாடிக்கொடி என்று அழைப்பதால் பிரம்ம கமலம் என்று பெயர் வந்துள்ளதாக கூறப்படுகிறது. பூத்துக் குலுங்கும் மலர்களின் நறுமணம் அப்பகுதி முழுவதும் வீசத் தொடங்கியுள்ள நிலையில் அப்பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

Exit mobile version