கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.
தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி சார்பில் அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், அரசு தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை என்றும் எனவே வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று நிர்மலா தேவி கோரியிருந்தார்.
ஏற்கனவே, முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோரும் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோரின் ஜாமின் மனுக்கள் மீதான விசாரணை நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.