சந்திரயான்-2 திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த மத்திய அரசு முடிவு: நிர்மலா சீதாராமன்

சந்திரயான்-2 திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2-வது முறையாக பிரதமர் பதவியேற்றுள்ள மோடி அரசின் 100 நாள் சிறப்புகளை விளக்குவதற்காக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் மூலம், மற்ற மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சலுகைகளை இனி காஷ்மீர் மக்களும் பெற வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறினார்.

அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீரை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய அவர், வாகனத் துறையில் சந்திக்கும் சிக்கல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறினார். தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன், சந்திரயான்-2 திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version