பாதுகாப்புத் துறையில் 100 சதவிகித அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
பெங்களூருவில் 12-வது சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய நிர்மலா சீதாராமன், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதியை பெருக்க வேண்டும் என்பதே கண்காட்சியின் நோக்கம் என்றார். தளவாட உற்பத்தியில் 600 உள்நாட்டு நிறுவனங்களும், 200 வெளிநாட்டு நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.
கடந்த நான்கரை ஆண்டுகளில் பாதுகாப்பு தொடர்பாக, 150 தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானாக குறிப்பிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரமன், 2 லட்சத்து 77 ஆயிரம் கோடி தளவாடப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.