பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார ஆய்வறிக்கையை, மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். நடப்பு நிதியாண்டில் எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 சதவிகிதம் அதிகரிக்கும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டின் நிதிப்பற்றாகுறை 6.4 சதவிகிதமாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் அது 5.8 ஆக குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025ல் இந்தியா 5 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டிலான பொருளாதார நாடாக திகழும் எனவும் அந்த அறிக்கை நம்பிக்கையளித்துள்ளது.

Exit mobile version