ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய நிதி அமைச்சர்

ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு நிதி உருவாக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரியல் எஸ்டேட் துறையில் 1,600 திட்டங்களில் சுமார் 5 லட்சம் வீடுகள் பாதியில் முடங்கி கிடப்பாக குறிப்பிட்டார். இந்த திட்டங்களை நிறைவு செய்ய சிறப்பு நிதி உருவாக்கப்படும் என்று தெரிவித்த நிர்மலா சீதாராமன், இதற்காக 25 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என்றார்.

மத்திய அரசு சார்பில் 10 ஆயிரம் கோடி ரூபாயும், பாங்க் ஆப் இந்தியா மற்றும் எல்ஐசி சார்பில் 15 ஆயிரம் கோடி ரூபாயும் ஒதுக்கப்படும் என்று கூறினார்.

Exit mobile version