போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம் பிடித்துள்ளார்.
பெண்கள் பல்வேறு துறைகளில் தங்களின் திறமையால் சாதித்து, அங்கீகாரம் பெற்று வருகின்றனர். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை ‘உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
இதில் உலகின் 34- வது சக்திவாய்ந்த பெண்மணி என்ற அங்கீகாரத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். 40 வது இடத்தை இரண்டாம் ராணி எலிசபெத் மற்றும் 42 -வது இடத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் பிடித்துள்ளார். இவர்களை விட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நம் இந்திய நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஈடுபட்டு இருப்பதால் உலகில் சக்தி வாய்ந்த பெண் என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது