டெல்லி நீதிமன்றத்தில் நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை

நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற ஒரு வாரகாலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் நிர்பயாவின் தாயார் தங்களுக்கு நீதி வழங்கக் கோரி நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிட உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, அவர்களின் கருணை மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. கடந்த வாரம் குற்றவாளிகள் தூக்கிலிடப்படவேண்டிய நிலையில், அவர்களின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தூக்கிலிடும் தேதியை டெல்லி நீதிமன்றம் முடிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்தது. மேலும், சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள வாய்ப்புகளை குற்றவாளிகள் முழுவதுமாக பயன்படுத்தி கொள்ள ஒரு வாரக்காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூக்குத் தண்டனை தொடர்பான புதிய மனு, டெல்லி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுத நிர்பயாவின் தாயார், 7 ஆண்டுகளாக நீதி கேட்டு போராடி வருவதாகவும், தனது உரிமைகளுக்கு மதிப்பில்லையா எனவும் கேள்வி எழுப்பினார்.

Exit mobile version