நிர்பயா வழக்கு : குற்றவாளி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

நிர்பயா கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பவன்குமார் குப்தாவின் மேல்முறையீட்டு மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது…

2012ஆம் ஆண்டு டெல்லியில் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தொடர்புடைய 4 குற்றவாளிகளுக்கு டெல்லி நீதிமன்றம் தூக்குதண்டனை விதித்தது…  குற்றவாளிகளில் வினய் ஷர்மா, முகேஷ் குமார் ஆகியோர் சார்பில் ஏற்கனவே சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனையடுத்து, தூக்கு தண்டனை தொடர்பாக குடியரசுத்தலைவரிடம் மற்றொரு குற்றவாளி முகேஷ் சிங் கருணை மனு அளித்தார். அந்த மனுனும்  குடியரசுத்தலைவரால் நிராகரிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து, தற்போது பவன் குமார் குப்தா என்ற குற்றவாளி, உச்ச நீதிமன்றத்தில்  தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அதில்,கொலை நடந்தபோது தனக்கு 18 வயது நிரம்பவில்லை எனவும், தாம் சிறுவன் எனவும் கூறி, தண்டனையை குறைக்க கோரி இருந்தார்.  ஆனால் இதனை விசாரிக்க முகாந்திரம் இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் . இதனையடுத்து வரும் பிப்ரவரி 1 ந்தேதி  அனைவரும் தூக்கிலிடப்பட உள்ளனர்.

Exit mobile version