நிர்பயா வழக்கு: பிப்ரவரியில் குற்றவாளிகளுக்கு தூக்கு

நிர்பயா வழக்கில், குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டில், ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற மாணவி, 6 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேரை காவல் துறையினர் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர், இந்நிலையில், ராம் சிங் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மற்றொருவர் சிறார் பிரிவின் கீழ் இருந்ததால் அவரை சிறார் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கூர் நோக்கு சீர்திருத்த பள்ளியில் வைக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு பின்னர் விடுவிடுக்கப்பட்டார்.

இந்நிலையில், எஞ்சியுள்ள வினய் ஷர்மா, முகேஷ் சிங், பவன் குப்தா மற்றும் அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு, டெல்லி நீதிமன்றம் வரும் 22ம் தேதி தூக்கில் இட வேண்டுமென உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். அதை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன் பின்னர், முகேஷ் சிங் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனுவை அனுப்பி இருந்தார். ஆனால், அந்த மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.

இந்நிலையில், வரும் 22 ஆம் தேதி காலை 7 மணிக்கு திகார் சிறையில் தூக்குதண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது, பிப்ரிவரி 1-ம் தேதி காலை 6 மணிக்கு நிர்பயா குற்றவாளிகள் 4  பேரை தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version