நீண்ட தூர இலக்கை தாக்கி அழிக்கும் நிர்பயா ஏவுகணையின் சோதனை வெற்றி

எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கவல்ல நிர்பயா ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை நிலம், நீர், ஆகாயம் மூலமாக தாக்குதல் நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் பாலசோர் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்ட இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.

மணிக்கு 865 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் நிர்பயா ஏவுகணை தரையிலிருந்து 100 மீட்டர் உயரத்தில் செல்லும் இலக்குகளையும் தாக்கி அளிக்க கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version