கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததற்கு எதிராக, நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
டெல்லியை சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், பவன்குப்தா, வினய் சர்மா, அக்சய் தாகூர் மற்றும் முகேஷ் குமார் ஆகியோருக்கு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. 4 பேருக்கும் பிப்ரவரி 1ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தனது கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்ததற்கு எதிராக, முகேஷ் குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், முகேஷ்குமார் தாக்கல் செய்த மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை எனவும், அவரது கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தது சரியானது தான் என தெரிவித்ததுடன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.