நீரவ் மோடியின் காவல் ஆகஸ்ட் 22ம் தேதிவரை நீடிப்பு

லண்டன் சிறையில் உள்ள நீரவ் மோடியின் காவலை ஆகஸ்ட் 22ம் தேதி வரை நீட்டித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரியான நீரவ் மோடி , மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, திருப்பி செலுத்தாமல் வெளிநாடுக்கு தப்பி ஓடினார். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், நீரவ் மோடி லண்டனில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

இந்திய அரசு எடுத்த நடவடிக்கையின் பேரில், நீரவ் மோடியை லண்டன் போலீசார் கடந்த மார்ச் 19ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். அவருக்கு ஜாமீன் வழங்க வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், நீரவ்மோடி இன்று மீண்டும் வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றத்தில் வீடியோ கான்ஃபரன்ஸிங் வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீரவ் மோடியின் காவலை வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Exit mobile version