தந்தை திட்டியதால் மனமுடைந்த 9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தந்தை திட்டியதால் 4ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் மதன். கும்பகோணத்திலுள்ள உறவினர் வீட்டில் தங்கி 4ம் வகுப்பு படித்து வரும் மதன், ஊரடங்கு பிறப்பித்ததால் பள்ளி விடுமுறையை முன்னிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில், வீட்டிலுள்ள அனைவரும் உணவருந்தி கொண்டிருந்த போது, முருகேசன், மதனை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மதன், வீட்டிலுள்ள அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version