ஷேக் ஹசீனா மீது தாக்குதல் நடத்திய 9 பேருக்கு மரண தண்டனை

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மீது கடந்த 1994 ல் தாக்குதல் நடத்திய 9 பேருக்கு, நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஷேக் ஹசீனா 1994ம் ஆண்டு வங்கதேச எதிர்கட்சித் தலைவராக இருந்தார். பிரச்சாரத்திற்காக டாக்காவிலிருந்து பாப்னா மாவட்டத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது, ஹசீனா பயணம் செய்த இரயில் பெட்டி மீது, வங்கதேச தேசிய கட்சி தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஹசீனா உயிர் தப்பினார். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்டதாக வங்கதேச தேசிய கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் 52 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

25 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்பளித்த நீதிமன்றம், முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் 9 பேருக்கு தூக்கு தண்டனையும், 25 பேருக்கு ஆயுள் தண்டனையும், 13 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கியுள்ளது.

Exit mobile version