நீலகிரி மாவட்டத்தில் 100 சதவீதம் இயற்கை முறையில் உரம் தயாரித்து, விவசாயம் செய்து விவசாய ஒருவர் சாதனை

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே, 100 சதவீதம் இயற்கை முறையில் உரம் தயாரித்து, விவசாயம் செய்து, பல விருதுகளை பெற்று, விவசாய ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

பந்தலூர் தாலுக்காவில் உள்ள மாங்கோடு கிராமத்தை சேர்ந்தவர், விவசாயி குமரன். இவர் ரசாயன உரங்களை முற்றிலும் தவிர்த்து, 100 சதவீதம் இயற்கை முறையில் உரம் தயாரித்து, விவசாயம் செய்து வருகிறார். விவசாயத் துறையில் கடந்த 40 வருடமாக ஈடுபட்டு வருவதாகவும், கடந்த 8 வருடமாக ரசாயன பொருட்களை முற்றிலும் தவிர்த்து இயற்கை முறையில், குடும்பத்தினரின் உதவியுடன் இயற்கை உரம் தயாரித்து விவசாயம் செய்து வருவதாகவும் கூறுகிறார்.

இயற்கை விவசாயத்திற்கு முக்கிய தேவை நாட்டு மாடுகள் எனவும், தன்னிடம் 6 நாட்டு மாடுகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ரசாயன முறையை விட இயற்கை விவசாயம் அதிக லாபம் ஈட்டித்தருவதோடு செலவும் குறைவு என அவர் மகிழ்ச்சியுடன் கூறுகிறார். இதற்காக அவருக்கு தமிழக அரசு விருது வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version