நீலகிரி மாவட்டம் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், நீலகிரி மக்களவைத் தொகுதிகுட்பட்ட, உதகை, குன்னூர், கூடலூர உள்ளிட்ட 6 தொகுதிகளில் பதிவான வாக்குப்பெட்டிகள், சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், வாக்கு எண்ணும் மையத்திற்கு துணை ராணுவப் படை, உள்ளூர் காவல் துறையினர் என 300க்கும் மேற்பட்டோர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள கல்லூரி வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான இன்னசென்ட் திவ்யா மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.