நீலகிரி மாவட்டம் கிலேன்ராக் பகுதியில், இயற்கை உணவுகளை உண்பதால், இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கூடலூரை அடுத்துள்ள கிலேன்ராக் பகுதியில் காட்டுநாயக்கர் என அழைக்கப்படும் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். எந்தவித சாலை வசதியும் இன்றி, அடர்ந்த வனப்பகுதிக்குள் வசிக்கும் இவர்கள், நகரங்களுக்கு செல்ல வேண்டுமானால் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்தே செல்லும் நிலை உள்ளது.
தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் பணியாற்றி வரும் இவர்கள் யாருக்கும் இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை என தெரிவிக்கின்றனர். வனப்பகுதியில் உள்ள கீரை, கிழங்கு மற்றும் மருத்துவ குணம் வாய்ந்த உணவுகளை உட்கொள்வதால், தங்களுக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர்.
மேற்கண்ட செய்தியை காட்சிப்பதிவு வடிவமைப்பில் காண கீழே உள்ள YOUTUBE-பிரிவில் உள்நுழையுங்கள்…
??⤵⤵↕↕⬇⬇⏬⏬????⤵⤵↕↕⬇⬇⏬⏬????⤵⤵↕↕⬇⬇⏬⏬??