நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா புனல் மின் நிலையத்தில் புனரமைப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பைக்காரா புனல் நீர்மின் திட்டத்தின்கீழ் உள்ள 12 மின் நிலையங்கள் மூலம் 833 புள்ளி 77 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீர், ராட்சத குழாய்கள் மூலம் குந்தா மின் நிலையம் கொண்டு வரப்பட்டு, மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், குந்தா புனல் நீர் மின் நிலையத்தில், தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. புனரமைப்பு பணிகளை விரைவில் முடித்து, மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்