ஈரோடு மாவட்டம் பவானியில் தமிழர் பாரம்பரியத்தை பறைச்சாற்றும் வகையில் நிலா பிள்ளை சோறு கும்மியடி திருவிழா நடைபெற்றது.
பவானி லட்சுமி நகர் பகுதியில் தை மாதம் பவுர்ணமி தினத்தில் இருந்து ஏழு நாட்கள், வீதியின் மையத்தில் நிலாவினை பிள்ளையாக பாவித்து விநாயகருக்கு அலங்காரம் செய்து முளைப்பாரி வைப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான விழாவும் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
வீடுகளில் இருந்து எடுத்து வந்த உணவினை பெண்கள், நிலா பிள்ளைக்கு படைத்து கும்மியடித்தனர். கடைசி நாளில் மாவிளக்கு தயாரித்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.