மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் காரணமாக, வார இறுதி நாட்களில் பொதுமுடக்கத்தை அம்மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்ததை அடுத்து, நோய் பரவலை கட்டுப்படுத்த அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில், நோய் பரவலை கட்டுப்படுத்த, வார இறுதி நாட்களில் பொது முடக்கமும், மற்ற நாட்களில் இரவு பொதுமுடக்கம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கும் பொது முடக்கம் திங்கள் கிழமை காலை 7 மணிக்கு நிறைவுபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், வாரத்தின் அனைத்து நாட்களிலும் இரவு பொதுமுடக்கமானது காலை 7 மணி வரை அமலில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.