கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு: தேனி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலி காரணமாக, தேனி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரை 86 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, முன்னெச்சரிக்கையாக தேனி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. போடி அருகே, முந்தல் சோதனை சாவடியில், கேரளாவில் இருந்து போடி மெட்டி வழியாக, தேனி மாவட்டத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுகின்றன. டெம்புச்சேரி வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர், கிராம சுகாதார செவிலியர்கள் அடங்கிய குழு, சோதனை செய்து வருகிறது. காய்ச்சல் பாதிப்புடன் இதுவரை யாரும் வரவில்லை என்றும், சோதனை செய்யும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version