கேரளாவில் உறுதி செய்யப்பட்டது நிபா வைரஸ் தாக்குதல்

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நிபா வைரஸ் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நபருக்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிபா உறுதி செய்யப்பட்ட நபரை மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாக தெரிவித்தார். நோயாளிக்கு நெருக்கமான 86 பேர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் ஷைலஜா, அதில் 2 பேருக்கு காய்ச்சல் இருப்பதாக கூறினார். அவர்களுக்கு தனி அறையில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். நிபாவை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் மருத்துவ குழுக்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதால், பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version