இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு இலங்கையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக, அங்கு சென்று விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்.ஐ.ஏ. அமைப்பிற்கு அதிக அதிகாரங்கள் வழங்கி நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, வெளிநாடுகளுக்கும் சென்று, இந்தியர்கள் தொடர்புடைய குற்றங்கள், இந்தியா மீது நடத்தப்பட உள்ள தாக்குதல்கள், அதற்கான சதி, இன்னும் பிற குற்றங்களை விசாரிக்க, என்.ஐ.ஏ.,வுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது.
இதுவரை, வெளிநாடுகளில் கைது நடவடிக்கை மேற்கொள்ள முடியாமல் இருந்த என்.ஐ.ஏ.வுக்கு, சட்ட திருத்தங்கள் மூலம் வெளிநாடுகளில் பதுங்கி இருப்போரையும் கைது செய்யும் அதிகாரம் கிடைத்துள்ளது. அதனால், இலங்கை வெடிகுண்டு தாக்குதல், அதனுடன் தொடர்புடைய இந்தியர்களின் பங்கு குறித்தும் விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் இலங்கை செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.