கிலாபத் இயக்கத்தை சேர்ந்தவர்களின் வீடுகளில் NIA அதிகாரிகள் சோதனை

தஞ்சாவூர் மாவட்டம மகர்நோம்புச் சாவடி அருகே கிலாபத் இயக்கத்தை சேர்ந்தவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை ஈடுபட்டுள்ளனர். 

ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு மற்றும் பிற சமூகத்தை பற்றி சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களைப் பரப்பியதாக கூறி கடந்த ஓராண்டுக்கு முன் கிலாபத் இயக்கத்தை சேர்ந்த அப்துல் காதர் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இவரை தொடர்ந்து திருவாரூரை சேர்ந்த மண்ணை பாபா என்பவரும்கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கிலாபத் இயக்கத்தில் தொடர்புடையதாகக் கூறி தஞ்சை கீழவாசல் தைக்கால் தெரு சேர்ந்த மெக்கானிக் அப்துல் காதர், முகமது யாசின் மற்றும் காவேரி நகர் பகுதியை சேர்ந்த அகமது ஆகியோரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தாங்கள் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தவறாக சித்தரிக்கப்படுவதாக கூறி அவர்களது உறவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Exit mobile version