நயன்தாராவின் 'ஐரா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ’ஐரா’ திரைப்படம் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றது. மாயா, டோரா,அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம் என கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வந்த நயன்தாரா தற்போது ஐரா திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

படத்தின் Post Production முடிந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. நயன்தாராவின் ‘ஐரா’ படம் மார்ச் மாதம் 28ந் தேதி வெளியாகும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Exit mobile version