whatsapp நிறுவனம் தனது புதிதாக “call waiting” என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் அதிகமான பயனாளர்களால் உபயோகிக்கப்படும் செயலியான whatsapp அடுத்தடுத்து தனது அப்டேட்டுகளை வெளியிட்டு கொண்டுள்ளது. சமீபத்தில் Fingerprint வசதியை புதிதாகவும், ஏற்கனவே whatsapp Group களில் இடம்பெற்ற Nobady ஆப்ஷனை நீக்கியும் அப்டேட்டுகளை வெளியிட்டது.
இந்நிலையில் தற்போது புதிதாக “call waiting” என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நிச்சயம் whatsapp call-ஐ உபயோகிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது இடையில் வரும் மற்றொரு புதிய அழைப்பை தொடரவோ அல்லது பேசிக்கொண்டிருந்த இணைப்பை துண்டிக்கவோ முடியும்.ஆனால் இருவரில் ஏதேனும் ஒருவரை “hold” முறையில் வைப்பது கடினம். கடந்த மாதம் ஐபோன்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய வசதி இப்போது ஆண்ட்ராய்டு வெர்ஷனிலும் கிடைக்கிறது. இந்த வசதியை நீங்கள் whatsapp-ஐஅப்டேட் செய்து Account > Privacy > Groups என்ற ஆப்ஷனில் பெறலாம்.