பிகில் திரைப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை மிக அதிகமான தொகைக்கு யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்டர்ஸ் என்ற நிறுவனம் எக்ஸ் ஜென் ஸ்டுடியோ என்ற நிறுவனத்துடன் இணைந்து பெற்றுள்ளதாக புது அப்டேட் சிக்கியுள்ளது.
அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் பிகில்.இது பற்றி எந்த அப்டேட்களும் பட குழுவினர் வெளியிடாமல் வைத்திருந்து தளபதி பிறந்தநாளன்று படத்தின் பெயரை வெளியிட்டனர்.மேலும் படத்தின் மூன்று போஸ்டர்களும் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படம் தீபாவளி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.யோகி பாபு, விவேக் என நட்சத்திர பட்டாளங்கள் பலர் இணைந்துள்ளனர்.இப்படத்தினை ஏஜிஎஸ் என்டர்டைமெண்ட்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது.இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
தற்போது இப்படத்தினை பற்றிய புதிய அப்டேட்டை படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.பிகில் திரைப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை மிக அதிகமான தொகைக்கு யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்டர்ஸ் என்ற நிறுவனம் எக்ஸ் ஜென் ஸ்டுடியோ என்ற நிறுவனத்துடன் இணைந்து பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
Happy to announce that XGen Studio and United India Exporters have bagged the overseas rights for #Bigil This will be our #Thalapathy’s largest worldwide release ?? pic.twitter.com/wY88aPVi0V
— Archana Kalpathi (@archanakalpathi) July 2, 2019
மேலும் தமிழகத்தில் பிகில் திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் வெளியிடுகிறது எனவும் கூறியுள்ளார்.
Ags Entertainment is happy to announce that @Screensceneoffl has procured the most sought after Tamil Nadu Theatrical rights of #Bigil . We look forward to a long and successful association with them ?@Ags_production @agscinemas pic.twitter.com/vLTjLCRd1Y
— Archana Kalpathi (@archanakalpathi) July 2, 2019