வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனை கொரானா வார்டினுள் மழை நீர் புகுந்ததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து செல்கிறது. இந்நிலையில், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரானா வார்டினுள் மழை நீர் புகுந்ததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர். சிகிச்சை பெற்றுவந்த 23 கொரோனா நோயாளிகள் தற்போது சாதாரன வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மழைக்காலங்களில் மாவட்ட மருத்துவமனை நிர்வாகம் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நோயாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கொரானா நோய்த்தொற்று வீரியமாக இருக்கும் சூழலில் இதுபோன்ற அதிகாரிகளின் மெத்தனப்போக்கினால் பொதுமக்கள் பெரும் துயரத்தை சந்தித்து வருகின்றனர்.
எமது செய்தியாளர் தரும் கூடுதல் தகவல்கள் உள்ளே…
↕↕↕↕