போதை ஊசி சுகவாசிகள்- வீடியோ வெளியான நிலையில் நடவடிக்கை

image

கோவையில் இளைஞர்கள் போதை ஊசி செலுத்தி கொள்ளும் வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், வீடியோ காட்சிகளில் இருந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கூட்டமாக இளைஞர்கள் அமர்ந்து போதை ஊசி செலுத்திக்கொள்ளும் வீடியோ காட்சியைக் கண்ட குனியமுத்தூர் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

 

இந்த நிலையில் சாகின், பிரசாந்த் குமார், சாதிக், பிரசாந்த் ஆகிய நான்கு பேரை கைது செய்த காவல்துறையினர், போதை ஊசி தொடர்பாகவும், அவர்களுக்கு ஊசியை விநியோகம் செய்தவர்கள் தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version