அதிமுக மற்றும் சார்பு அமைப்புகளுக்கு புதிய நிர்வாகிகள்-நியமனம்-தலைமைக் கழக அறிவிப்பு

அதிமுக மற்றும் சார்பு அமைப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து, அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக தலைமைக் கழகப் பேச்சாளர் பேராசிரியர், முனைவர் கலைப்புனிதன் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. மருதராஜா, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. முத்தையா, சென்னை மாநகராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர் ராயபுரம் மனோ, முன்னாள் அமைச்சர் தாமோதரன் ஆகியோர், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளராக, முன்னாள் எம்.எல்.ஏ பொன் ராஜா, துணைச் செயலாளராக சென்னை மாநகராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர் சந்தானகிருஷ்ணன் ஆகியோரை நியமித்துள்ளனர்.

எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளராக சென்னை மாநகராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர் லட்சுமிநாராயணன், கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளராக வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டம் பெரம்பூரை சேர்ந்த சேவியர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

 

கூடுதல் தகவல்களை செய்தியாளர் வாயிலாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்..

↕↕↕

Exit mobile version