முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 2 பேர் -நீக்கம்-அதிமுக தலைமை உத்தரவு

imageகழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணாக செயல்பட்டதால், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 2 பேரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு தலைமை முன்னாள் கொறடாவும், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளருமான நரசிம்மன், அரியலூர் மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான இளவழகன் ஆகியோர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழக உடன்பிறப்புகள் யாரும் அவர்களுடன் எந்தவிதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என அதிமுக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.

 

செய்தியை கேட்டறிய

⬇⬇⬇⬇

Exit mobile version