முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளத்தில் புறக்கணிக்கப்பட்ட சேலம், கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்கள், ‘நியூஸ் ஜெ’ செய்தி எதிரொலியால் இணையத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டது.
முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளத்தில் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அதிகாரிகள் கொண்ட பட்டியலை தமிழ்நாடு அரசு பதிவேற்றம் செய்தது. இதில், 30 மாவட்டங்களுக்கான விவரங்கள் மட்டும் இடம் பெற்றிருந்தன. ஏனைய மாவட்டங்களான சேலம், கோவை, தேனி, தென்காசி, ராணிப்பேட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டன. 8 மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டது குறித்து, கடந்த 11ஆம் தேதி ‘நியூஸ் ஜெ’ தொலைக்காட்சியில் செய்தி ஒளிப்பரப்பானது. இதன் எதிரொலியாக, முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளத்தில் விடுபட்ட 8 மாவட்டங்களும் சேர்க்கப்பட்டு, அதற்கான கண்காணிப்பு அதிகாரிகள் பட்டியலும் தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாவட்ட மக்கள் தங்கள் கோரிக்கைகளையும், குறைகளையும் அரசின் கவனத்திற்கு கொண்டு வர ‘நியூஸ் ஜெ’ வழிவகை செய்துள்ளது.