மைக்கேல் ஜாக்சன் முதல் எம்எஸ் தோனி வரை தலை முடியில் சிற்பங்களை செதுக்கும் சகோதரர்கள்!!

பஞ்சாப்பை சேர்ந்த முடிதிருத்தும் சகோதரர்கள், தங்கள் வாடிக்கையாளர்களின் தலையில் கலை வண்ணத்தை செதுக்கி வருகின்றனர். தங்களுக்கு பிடித்தவர்கள் போல், சிகை அலங்காரம் செய்து கொள்ளும் பேஷன் செய்த காலம் போய், தற்போது தங்களுக்கு பிடித்தவர்களையே தலையில் வரைந்து கொள்ளும் காலம் டிரெண்டாகி வருகிறது.

பஞ்சாப்பின் மந்தி தாப்வாலி பகுதியை சேர்ந்த ராஜ்விந்தர் சிங் மற்றும் குர்விந்தர் சகோதரர்கள், தங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பம் போல் தலை முடியில் சிற்பங்களை செதுக்கி வருகின்றனர். மைக்கேல் ஜாக்சன், எம்எஸ்தோனி, தாஜ்மஹால், மிக்கி மவுஸ், உள்ளிட்டவைகளின் படங்களை வாடிக்கையாளரின் தலை முடியில் தத்ரூபமாக வெட்டி வருகின்றனர்.

Exit mobile version