9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், நாளை பதவியேற்று கொள்கின்றனர்.
செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்றது.
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 22 ஆயிரத்து 581 பதவியிடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் நாளை பதவியேற்கின்றனர். மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலங்கள், ஊராட்சி அலுவலங்களில் நடைபெறும் கூட்டத்தில் பதவியேற்று கொள்கின்றனர். அதைத்தொடர்ந்து, மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு வருகிற 22ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.
மேற்கண்ட செய்தியை காணொலிப்பதிவில் கேட்க