இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் திறனற்ற அரசாக இருக்கிறதா திமுக?

விழுப்புரம் அருகே கள்ளச்சாராயத்தை குடித்த பலர் உயிரிழந்தது குறித்தும், கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் திறனற்ற நிலையில் இருக்கிறதா ஸ்டாலின் அரசு என்பது குறித்தும் அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தே மதுவிலக்குக்கு தான் என்று வாக்குறுதி கொடுத்த ஸ்டாலின், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் மதுவிலக்கையும் கொண்டு வரவில்லை, டாஸ்மாக் கடைகளையும் குறைக்கவில்லை.

டாஸ்மாக் விற்பனை மூலம் கல்லாகட்டும் விடியா அரசு, அதிகவிலைக்கு மதுபானங்களை விற்கும் நிலையில், கள்ளச்சாராய விற்பனையும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது….அப்படி விற்கப்படும் கள்ளச்சாராயத்தை குடித்த பலரின் உயிரை காவு வாங்கியிருக்கிறது இந்த விடியா திமுக அரசு….கள்ளச்சாராயம் பலரது உயிரை பறித்த நிலையில், மேலும் பலர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளனர்….

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயத்தை திமுகவைச் சேர்ந்தவர்கள் விற்று வந்த நிலையில் அதை வாங்கி குடித்த பலர் பரிதாபமாக உயிரிழந்தது குறித்து ஆளும் அரசை கடுமையாக சாடியிருக்கிறார் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே பழனிசாமி….உயிர் பலிகளுக்கு விடியா அரசே பொறுப்பேற்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாலாறும் தேனாறும் ஓடுகிறது என்று சொல்லும் திமுக ஆட்சியில்…கஞ்சா ஆறும், கள்ளச்சாராய ஆறும் தான் ஓடுகிறது……கஞ்சா டூ பாயிண்ட் ஓ (2.0), த்ரீ பாயிண்ட் ஓ (3.0) என்று எத்தனை ஆபரேஷன்களை திமுக அரசின் காவல்துறை நடத்தினாலும் தமிழகத்தில் கஞ்சா புழக்கத்தை இந்த அரசால் கட்டுப்படுத்தமுடியவில்லை என்பது, தொடர்ந்து மக்கள் மன்றத்தில் நிரூபணமாகி வருகிறது…..

டாஸ்மாக் வருமானத்தில் மட்டுமே குறியாக இருக்கும் டாஸ்மாக் அமைச்சர் ஒருபுறம், டாஸ்மாக்கை நம்பி மதுபான ஆலைகளை நடத்தும் திமுகவினர் ஒருபுறம் என தமிழக இளைஞர்களை போதையின் பிடியில் வைத்திருக்கின்றனர் திமுகவினர்….

கஞ்சா, மது ஆகியவற்றை கடத்தும் சம்பவங்கள் தினமும் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்க, அதை கண்டும் காணாமல்தான் காவல்துறை இருக்கிறதா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டை திமுக அரசு அறிவித்திருந்தாலும் அது வெறும் கண்துடைப்பு தான் எனவும், கஞ்சா, மது உள்ளிட்ட போதை வஸ்துக்களின் புழக்கத்தை உடனடியாக அரசு கட்டுப்படுத்தவில்லை என்றால் தமிழக இளைஞர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்படி கள்ளச்சாராயத்தை காய்ச்சி விற்கும் சமூக விரோதிகளை கைது செய்யுமா திமுக அரசு? கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்தமுடியாமல் திறனற்ற நிலையில் தான் ஸ்டாலின் அரசு இருக்கிறதா? மதுபானம், கள்ளச்சாராயம் விற்க அனுமதி அளிக்கத்தான் முதல்வர் ஆனாரா ஸ்டாலின்? என்று கேள்விகளால் துளைக்கின்றனர் பாதிக்கப்படும் பொதுமக்கள்.

Exit mobile version