அன்று துரோகிகள், எதிரிகள் என்று சொன்னவர்களோடு இன்று கொஞ்சிக்குலவும் பன்னீர், தனது அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆனதால் ஒவ்வொரு கூடாரமாக அலைந்து திரிவது குறித்தும், வெளுத்துப் போனதா பன்னீரின் சாயம் என்பது குறித்தும் அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.
ஒருவருக்கு எண்ணங்கள் மாறலாம், கொள்கைகள் மாறலாம்….. ஆனால் நேற்று துரோகிகள், எதிரிகள் என்றெல்லாம் பேசிவிட்டு, இன்று அவர்களையே சார் சார் என்று மாறி மாறி மாறி மாறி பேசுவதெல்லாம் கைவந்த கலையாக இருப்பவர்களை என்ன சொல்லி அழைப்பது? …. ஒரே ஒருபெயர் இருக்கிறது… அதுதான் பன்னீர்… துரோகத்தின் மறுபெயர், அரசியலில் நிறம்மாறும் ஒரு பெயர் …
தனக்கு தன் குடும்பத்திற்கு தன் பிள்ளைகளுக்கு பதவி கிடைக்கவில்லை என்றால், தொண்டர்கள் தங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் உடனே குட்டிகரணம் அடித்தாவது ஏதாவது செய்து குட்டையை குழப்பிவிடலாம்… குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கலாம்… கட்சியை எப்படி
சர்வநாசம் செய்யலாம்? என்று சதாசர்வகாலமும் யோசித்துக்கொண்டிருக்கும் ஒருவர் … எங்கு வேண்டுமானாலும் போவார்… யாரை வேண்டுமானாலும் சந்திப்பார்.. யார் காலை வேண்டுமானாலும் பிடிப்பார்…. அப்படிப்பட்டவர்தான் பன்னீர்…
அட என்னங்க இப்படி சொல்லீட்டீங்க என்று உச் கொட்டும் சிலருக்கு, பன்னீரின் துரோக வரலாற்றை சற்றே நினைவு படுத்த வேண்டியிருக்கிறது. 2017 ம் ஆண்டு யாரை வெறுத்து யாருக்கு எதிராக அம்மா சமாதியில் தர்மயுத்தம் தொடங்கினாரோ அவர்களையே இன்று நேரில் சந்தித்து சார் சார் சார் என்று காலில் விழாத குறையாக கெஞ்சிக்கொண்டிருப்பதற்கு ஒரு தனி தில் வேண்டும்தானே… அரசியல் எதிரி என்று சொன்ன திமுகவினரோடு திரைமறைவில் கைகோர்த்து வந்த பன்னீரின் தில்லாலங்கடிகள் சபரீசன் சந்திப்பில் பல்லிளித்தே… இதேபோல், தினகரனுடனான சந்திப்பில் பன்னீரின் துரோகச் சாயம் வெளுத்ததே… கருணாநிதியின் கதை வசனத்தை மனப்பாடம் செய்து சொல்லி சொல்லி ரசித்துவந்ததை புரட்சித்தலைவி இருக்கும்போது வெளியே சொல்லாம் கப்சுப் என்று இருந்துவிட்டு மறைத்தது, புரட்சித்தலைவி ஜெயலலிதாவிற்கும் செய்த பச்சைத் துரோகம் தானே? இப்படி தன் அரசியல் வாழ்க்கையில் தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுகொண்ட ஒருவர்தான் இந்தப்பன்னீர்…
இப்படி அரசியலில் கையறு நிலையை அடைந்ததால் என்னசெய்வதென்று தெரியாமல் ஒவ்வொரு கூடாரமாக கதவைத்தட்டிக்கொண்டிருக்கும் நிறம் மாறும் பன்னீரின் அரசியல் ஞானத்தை புட்டு புட்டு வைக்கிறார்கள் அரசியல் அறிந்தவர்கள்.