ஊரே ஐபிஎல்-ல் சென்னை ஜெயித்ததை கொண்டாடிக்கொண்டிருங்கும் வேளையில் தமிழகத்தின் அரசியல் ஊடகங்களில் பெரும் ப்ரேக்கிங் செய்தி…. என்ன தெரியுமா? ஒரு ஃபோட்டோ ஒரு வீடியோ.. ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கையே க்ளோஸாகியிருந்த ஒருவரின் உண்மை முகம் டார் டாராக கிழிந்து தொங்குகிறது. அம்மா ஆன்மா சொன்னது, அவங்க சொன்னாங்க, இவங்க சொன்னாங்க என்றெல்லாம் புளுகு மூட்டையை அவிழ்த்துவிட்டுக்கொண்டிருந்த பன்னீரின் கோரமான துரோக முகத்தின் சாயம் வெளுத்துவிட்டது. புரட்சித்தலைவியின் ஆன்மா உறங்கும் கடற்கரைக்கு ஒரு சில மீட்டர் தூரத்திலேயே நடந்த துரோக கூட்டணியின் கள்ள உறவை கண்ட மாத்திரத்திலேயே கையில் சாட்டையை சுழற்ற தயாராகிவிட்டனர் அந்த துரோகியை நம்பிப்போன ஒன்றிரண்டு பேரும்…
ஐபிஎல் கிரிக்கெட் பார்க்கப்போகிறேன் என்று போக்குக்காட்டிவிட்டு கருணாநிதி கேலரியில் அமர்ந்துகொண்டு ஸ்டாலினின் மருமகன் சபரீசன் இருக்கும் இடத்தை தேடிப்போய் கைகுலுக்கி உறவாடி இருக்கிறார் பன்னீர்.. அடேயப்பாஆஆஆஆ… இவ்வளவு நாள் ஒளிந்துகொண்டிருந்த பூனைக்குட்டி வெளியே வந்தது… கள்ள உறவும் கபட நாடகமும் இன்று காட்சி ஊடகங்களில் பேசுபொருளாகி இருக்கிறது..
திமுக எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் ஆரம்பிக்கப்பட்ட அதிமுக என்னும் மாபெரும் மக்கள் இயக்கம் பல்வேறு போராட்டங்களையும், பல்வேறு துரோகங்களையும், துரோகிகளையும் எத்தனை எத்தனையோ சோதனையான கட்டங்களையும் தாண்டி வந்திருக்கிறது. ஆனால், வரலாற்றில் இப்படி ஒரு துரோகியை கண்டதே இல்லை என்று சொல்லும் அளவுக்கு தன்னுடைய கீழ்த்தரமான செயல்களால் தன் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் பன்னீர்.
அதிமுகவை அழிக்கத்துடிக்கும் துரோகிக்கூட்டத்தோடும், குடும்பத்தோடும் ஒட்டி உறவாடிக்கொண்டிருக்கும் பன்னீரின் நடவடிக்கைகளை ஏற்கனவே சந்தேகித்திருந்தனர் பலரும்… சட்டமன்றத்தில் கருணாநிதி புகழ்பாடியது, கருணாநிதி ஃபோட்டோவை வைத்திருக்கிறேன் என்று கொஞ்சிக்குலவியது… ஸ்டாலினின் ஆட்சியை புகழ்வது என்று இருந்து வந்த பன்னீரின் அரசியல் வாழ்க்கை அழிந்துபோனதால் என்ன செய்வதென்றே தெரியாமல் பித்துப்பிடித்துப்போய் திமுகவில் இணைவதற்காக துரோகிகளுடனே கைகோர்த்து விட்டார் …. எப்படியாவது கெஞ்சி கூத்தாடி திமுகவில் கடைசிப்படியிலாவது தொங்கிக்கொண்டு தன் அரசியல் வாழ்க்கையை தொடர்ந்துவிடலாம் என்று எண்ணி முதல்வரின் மாப்பிள்ளை சபரீசனை சந்தித்து பேசியிருக்கிறார். மேலும் உதயநிதியையும் அவர் சந்தித்ததாக தகவல்கள் கசிகின்றன…
ஆக, தன் அரசியல் வாழ்க்கை பூஜ்ஜியமானதால், திமுகவில் ஐக்கியமாகத் துணிந்துவிட்டாரா பன்னீர்?..