இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! ஸ்டாலின் ஆட்சிக்கு தலைவலியாக இருக்கிறாரா செஞ்சி மஸ்தான்?

கள்ளச்சாராய விற்பனை செய்தவர்களுக்கு துணைபோகும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் சொல்லியது குறித்தும் , ஸ்டாலின் ஆட்சிக்கு மற்றுமொரு தலைவலியாக செஞ்சி மஸ்தான் உள்ளாரா என்பது குறித்தும் அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.

ரேஷன் கடைகளில் அரிசி பருப்பு கிடைக்கிறதோ இல்லையோ, ஆவின் பூத்தில் பால் கிடைக்கிறதோ இல்லையோ டாஸ்மாக்கில் 24 மணி நேரமும் தடையின்றி சரக்கு கிடைக்கிறது இந்த விடியா ஆட்சியில்… இதுஒருபக்கம் என்றால், இன்னொரு புறம் கள்ளச்சாராயமும், கஞ்சாவும் ஆறாய் ஓடுகிறது. இந்த மாதம் கள்ளச்சாராய மாதம் என்று சொல்லுமளவுக்கு, கடந்த மே மாதம் முழுக்க விழுப்புரம், எக்கியார் குப்பம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து, கொத்து கொத்தாய் மக்கள் மடிந்துபோக மௌனித்து நிற்கிறது விடியா அரசு…

ஏன் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அலசி ஆராய்ந்த போதுதான் திமுகவின் தில்லாலங்கடி சாயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்க ஆரம்பித்தது… கள்ளச்சாராயத்தை காய்ச்சி விற்ற திமுக பெண் கவுன்சிலரின் கணவர் மரூர் ராஜா என்பவரை காவல்துறை கைது செய்யாமல் இருந்ததற்கு காரணம் என்ன தெரியுமா? அவர் திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு மிக நெருக்கமானவர்… இதைக் கண்டித்து அதிமுக எம்பி சி.வி.சண்முகம் புகார் தெரிவித்த பின்னரே குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதெல்லாம் வேறுகதை..

25 பேர் மரணத்தை தொடர்ந்து, கள்ளச்சாராய விற்பனை மற்றும் சட்டவிரோத பார்களை நடத்துதல் சம்பந்தமாக 4 திமுக நிர்வாகிகளை கைது செய்திருக்கிறது இந்த விடியா அரசு.. அதுவும் எதிர்க்கட்சித்தலைவரின் தொடர் வலியுறுத்தல்களால் … இதில் ஸ்பெஷாலிட்டியே என்னவென்றால், கைது செய்யப்பட்ட அனைவருமே அமைச்சர் செஞ்சி மஸ்தானின் ஆதரவாளர்கள் என்பதுதான்.. அதனால்தான் கடந்த 2 ஆண்டுகளாக விடியா அரசின் காவல்துறை இவர்களின் நடவடிக்கைகளை முழுமையாக அறிந்திருந்தும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்..

கள்ளச்சாராயம் காய்ச்சுபவருடன் ஒரு அமைச்சருக்கு என்ன நெருக்கம் வேண்டிக்கிடக்கிறது?

கள்ளச் சாராயம் விற்பவர்களோடு கட்டி உறவாடி, கேக் ஊட்டும் ஒருவர் அமைச்சராக நீடிக்க என்ன தகுதியிருக்கிறது? கட்சிக்காரர்கள் என்றால், சட்டவிரோதமாக என்னவேண்டுமானாலும் செய்வார்களா? என்று காரசாரமாக கேள்வி எழுப்பி இருக்கிறார் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே பழனிசாமி… இதனால் தான் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடனடியாக பதவி விலக வேண்டும் … அதை அவர் செய்யவில்லை என்றால் முதலமைச்சர் ஸ்டாலின் அவரை பதவியில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி சாட்டையை சுழற்றி இருக்கிறார்.

அமைச்சர் செஞ்சி மஸ்தானை எதிர்க்கட்சித்தலைவர் ஏன் பதவிவிலகச்சொல்வது ஏன்? கள்ளச்சாராய புழக்கத்தை தடுக்காத காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் அவர்களுக்கு துணைபோன அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? தயக்கமா? பயமா? இல்லை உண்மை தெரிந்துவிடும் என்ற நடுக்கமா? திமுக ஆட்சிக்கே அவப்பெயர் ஏற்படுத்திய கள்ளச்சாராய விவகாரத்தில், ஸ்டாலினுக்கு மற்றுமொரு தலைவலியாக மாறி இருக்கிறாரா செஞ்சி மஸ்தான்? என்ற கேள்விக்கான பதிலை ஸ்டாலின்தான் உணர்ந்துகொள்ள வேண்டும்.

Exit mobile version