அதிமுக நடத்திய பிரம்மாண்ட மதுரை மாநாட்டின் வெற்றியால் மண்டை குழம்பிப்போய் என்னசெய்வதென்றே தெரியாமல் திக்குமுக்காடிக்கொண்டிருக்கும் திமுக, குய்யோ முறையோ என்று கதறிக்கொண்டிருக்கிறது… ஓர் எதிர்க்கட்சி, அதுவும் ஆட்சியை இழந்து இரண்டரை ஆண்டுகளில் ஒரு மாபெரும் மாநாடு நடத்தி அதில் 15 லட்சம் பேரை கூட்டியிருக்கிறது… இதைக்கூட சரியாக கணிக்கத்தெரியாத அரசியல் கட்சியாக இருக்கும் திமுகவை நடத்திக்கொண்டிருக்கும் ஸ்டாலினின் தலைமையே தற்போது ஊசலாடிக்கொண்டிருக்கிறது.
மாநாட்டை கெடுக்கத்தான், உதயநிதி தலைமையில் உண்ணாவிரத நாடகம் போட்டது திமுக… 15 லட்சம் தொண்டர் படை முன்னால் அது துளிகூட எடுபடவில்லை… இதை அறிந்துகொண்டுதான் தற்போது, டிசம்பர் மாதத்தில் திமுக இளைஞரணி மாநாட்டை சேலத்தில் கூட்டப்போவதாக அறிவித்திருக்கிறது திமுக… அடேங்கப்பா, இதுதானாப்பா உங்க டக்கு? அதிமுக மாநாடு ஏற்படுத்திய தாக்கத்தை மக்கள் மனதில் இருந்து நீக்கவே இந்த அதரப்பழைய யுத்தியை கையில் எடுத்திருக்கிறது விடியா திமுக…
ஏங்க, பொறாமையில பொங்கலாம் ஆனா, இவ்ளோ வெளிப்படையா அப்பட்டமாவா பொங்குவீங்க? மாநாடு நடந்த அன்று உதயநிதி நடத்திய உண்ணாவிரதம் ஃபெயிலியர் ஆனது ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் அதிமுக மாநாடு வெற்றியடைந்ததை தாள முடியாமல், துரோகிகளை ஏவிவிட்டு, ஒன்றுமில்லாத சாப்பாட்டுப் பிரச்சனையை கிளப்பி திசை திருப்ப பார்த்தும், அதிலும் தோல்வியடைந்த ஸ்டாலின் செல்லுமிடமெல்லாம் அதிமுக மாநாட்டைப் பற்றி பேசிப் பேசி தங்கள் ஆத்திரத்தை தீர்த்துக்கொள்கின்றனர்…
ஓ கதறீங்களா? கதறுங்க கதறுங்க… என்று சமூகவலைதளங்களில் அசால்டாக திமுகவை சம்பவம் செய்கின்றனர் இதைகவனிக்கும் அதிமுகவினர்…
மாநாட்டை வெற்றிகரமா நடத்தி முடிச்சு அதிமுககாரங்களே துண்ட ஒதறி தோள்ல போட்டுட்டுப் போனதுக்கு பிறகும், மேடைக்கு மேடை அதிமுக மாநாடு பற்றி பேசி இன்னும் அதிமுகவிற்கு மார்க்கெட்டிங் செய்துகொண்டிருக்கிறார்கள் தந்தையும் மகனும்.
ஆக, அதிமுகவின் மாநாடு வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஸ்டாலினும், உதயநிதியும் பொங்குவது ஏன்? மேடைக்கு மேடை அதிமுக மாநாட்டை பற்றி அவதூறு பேசினால், மாநாட்டு வெற்றியை புறந்தள்ளிவிட முடியுமா? அதிமுக மாநாட்டு வெற்றியைக் கண்டு பொறுக்கமுடியாததால்தான் சேலத்தில் இளைஞரணி மாநாடு நடத்த திட்டமிட்டிருக்கிறதா திமுக? என்பன போன்ற கேள்விகளைப் பார்க்கும்போது, அதிமுக மாநாட்டின் தாக்கத்தால் கலக்கத்தில் இருக்கிறார் ஸ்டாலின் என்பது மட்டும் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது
Discussion about this post