ஒரு வழக்கின் தீர்ப்பை பார்த்ததும் ஒரு நீதிபதிக்கே 3 நாட்கள் தூக்கம் வரவில்லை… நீதிபதியின் மனசாட்சியையை உலுக்கியிருக்கிறது வழக்கு … நாம் எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்?
”திமுக அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட தீர்ப்பை பார்த்து நான் கண்களை மூடிக் கொண்டிருந்தால் கடமை தவறிவிடுவேன்”
அமைச்சர்களின் வழக்கில் தவறான நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருப்பதாகவும், நீதிமன்றம் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கோ அதில் தொடர்புடையவர்களுக்கோ அரசுக்கோ உரித்தானது அல்ல என்றும், நாட்டில் வாழும் குப்பனுக்கும், சுப்பனுக்கும் உரித்தானது எனவும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்….
இப்படி ஒரு பரபரப்பான ஸ்டேமெண்ட்டை உயர்நீதிமன்ற நீதிபதி கொடுக்கும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்தேறியிருக்கிறது….
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்ட தீர்ப்பை பார்த்து தூக்கம் வரவில்லை என்று கூறியிருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்….
இப்படி சொன்னது மட்டுமில்லாமல் அந்த வழக்கை தற்போது தூசி தட்டி மீண்டும் விசாரணைக்கு எடுத்திருக்கிறார்…..
2006-2011 ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாக பணியாற்றிய தங்கம் தென்னரசு மற்றும் கேகேஎஸ்எஸ்ஆர் ரமச்சந்திரன் ஆகிய இருவரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு ஒன்று கடந்த 2012 ஆம் ஆண்டு பதியப்பட்டது….ஆனால் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க இருவரும் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்…..இவர்களது உறவினர்கள் மீது வழக்கு இருந்ததால் அவர்களும் விடுவிக்கக்கோரி வழக்கு தொடுத்து இருந்தனர்…
இந்த நிலையில், அமைச்சர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் கீழமை நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பு வழங்கியது….ஆனால், இந்த வழக்கில் ஏதோ உள்ளடி வேலை நடைபெற்று இருக்கிறது என்பதை உணர்ந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த வழக்கை கையில் எடுத்துள்ளார்….
இதே போன்று தான் அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை சமீபத்தில் கையில் எடுத்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்….எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி என்பதால் தான் நீதிபதி தாமாக முன்வந்து வழக்கை கையில் எடுத்திருக்கிறார்…
வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞரோ பதறியடித்து வந்து, இந்த வழக்கு சரியாகவே விசாரிக்கப்பட்டதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறையினரின் விளக்கத்தை கேட்காமல் உத்தரவு ஏதேனும் பிறப்பித்தால் அது அதிகாரிகளை களங்கப்படுத்தும் வகையில் அமையும் என்று தெரிவித்திருக்கிறார்….
இதோடு மட்டுமில்லாமல், லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிகாரிகள் 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு தங்களது நிலைப்பாட்டில் இருந்து மாறியுள்ளதாகவும், யார் அதிகாரத்திற்கு வந்தாலும் வழக்குகளை நீர்த்துப் போகச் செய்வதாகவும், சிறப்பு நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் வழக்குகள் நடத்தப்படும் விதம் அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் நீதிபதி…
செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க அமைச்சர்கள் தரப்புக்கும், லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் உத்தரவு வெளியாகி உள்ள நிலையில் அடுத்தடுத்து அமைச்சர்கள் மீதான வழக்குகள் விசாரணைகளால் திமுக அரசின் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா?
திமுக அமைச்சர்கள் தொடர்ந்து சொத்துக்குவிப்பு வழக்குகளில் நீதிமன்றங்களை வளைக்கப் பார்த்தனரா?
உயர்நீதிமன்ற நீதிபதியே தாமாக முன்வந்து விசாரிக்கும் அளவுக்குத்தான் கீழமை நீதிமன்ற தீர்ப்புகள் இருக்கின்றனவா? என்ற கேள்வியே மக்கள் மன்றத்தில் எழுந்துள்ளது.
Discussion about this post