12 மணிநேர வேலை மசோதாவை நிறைவேற்றிய வேகத்தில் திரும்பப் பெற்றது… திருமண மண்டபங்களில் மதுவுக்கு அனுமதி அளித்த நிலையில், அதனையும் வாபஸ் வாங்கியது என்று, ஸ்டாலின் யூடர்ன் அரசாங்கம் நடத்துவது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்…..
பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளில் தொழிலாளர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படும் அளவுக்கு ஒரு சட்ட மசோதாவை நிறைவேற்றியது திமுக. 12 மணி நேரம் பணி செய்ய தொழிலாளர்கள் இனி தயாராக வேண்டும் என்பதுதான் அந்த சட்ட மசோதாவின் மையக் கரு…
பல்லாண்டுகளாக தொழிலாளர்கள் மேற்கொண்ட போராட்டங்களின் விளைவாகவே, 8 மணி நேர வேலை என்பது விடியலாய் அமைந்தது. அதனை தடுத்து, தொழிலாளர்களை வஞ்சிக்கும் விதமாக 12 மணி நேர பணி செய்ய வைத்து தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வெண் சாமரம் வீச முயன்றது திமுக அரசு.
தொழிலாளர்களை வேதனைக்குள்ளாக்கும் வகையில் சட்ட மசோதாவை நிறைவேற்றிவிட்டு,…. பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல… தனியார் தொழிற்சாலைகள் தொழிலாளர்கள் விருப்பத்தை ஏற்றுக் கொண்டு செயல்பட வேண்டும் என்றது.
ஆமாம்…சட்டத்தையும் நிறைவேற்றுவீர்கள்….அதற்கு ஒரு விளக்கமும் கொடுப்பீர்களா என்று கொந்தளித்தனர் தொழிலாளர்கள்…. எதிர்க்கட்சியான அதிமுகவும், தொழிலாளர் நலச்சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த சட்டமசோதாவை நிறுத்துவதாக அறிவித்துள்ளது திமுக.
இதனிடையே மதுபான விதிகளில் திருத்தம் செய்து திமுக வெளியிட்ட அரசாணை ஒன்றும் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மக்களை எந்நேரமும் போதையில் ஆழ்த்தி சிந்திக்க விடாமல் இருக்கச் செய்யும் வகையிலும், டாஸ்மாக்கில் இருந்து குடும்பத்துக்கு கல்லா கட்டும் நோக்கத்திலும், மைதானங்களிலும், திருமண மண்டபங்களிலும் மதுபானம் பரிமாற அனுமதி அளித்தது திமுக அரசு….
இதற்கும் எதிர்க்கட்சியும், பொதுமக்களும் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கவே, அதையும் நிறுத்திவிடுகிறோம் என அந்தர் பல்டி அடித்து யு – டர்ன் எடுத்து இருக்கிறது திமுக.
இப்படி யு- டர்ன் அடிப்பதால்தான் ஆளும் திமுக அரசை யு-டர்ன் அரசு என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ….
தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களையும், தொழிலாளர்களையும் வஞ்சிக்கும் நடவடிக்கைகளை திமுக மேற்கொண்டு வருவதாகவும், அதற்கு எதிர்க்கட்சி தலைமையில் பொதுமக்கள் தகுந்த பதிலடி கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதும் நடப்பவற்றை அவதானிக்கும் அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
Discussion about this post