நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் 2 ம் ஆண்டு துவக்க விழா: முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்பு

தமிழர்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் நீங்கா இடம்பிடித்துவிட்ட நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் 2 ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய மக்கள் இயக்கமாம் அதிமுகவின் கனவு தொலைக்காட்சியான நியூஸ் ஜெ தொலைக்காட்சி வெற்றிகரமான ஓராண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.. எதிரிகளின் பொய் பிரசாரங்களை தவிடுபொடியாக்கும் போர்முரசான நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் 2 ம் ஆண்டு துவக்க விழா, நுங்கம்பாக்கத்தில் உள்ள தொலைக்காட்சி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது..

விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணிவேலுமணி, சிவி சண்முகம், கே.பி.அன்பழகன்,சரோஜா,எம்சி சம்பத்,கே.சி.கருப்பணன், ஆர்.காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், சி. விஜயபாஸ்கர், துரைக்கண்ணு, கடம்பூர் ராஜு,வெள்ளமண்டி நடராஜன் ,கேசி வீரமணி , பெஞ்சமின், நீலோபர் கபில், எம்.ஆர். விஜயபாஸ்கர்,ராஜலட்சுமி, சேவூர் ராமச்சந்திரன், எஸ்.வளர்மதி உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.. அதே போல அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, அமைப்பு செயலாளர்கள் நத்தம் விஸ்வநாதன் , கோகுலா இந்திரா உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் பங்கேற்றனர்..

நியூஸ் ஜெ தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் , துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு செண்ட மேளம் முழங்க பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது…

இதையடுத்து வரவேற்பறையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்களுக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்..

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நியூஸ் ஜெ தொலைக்காட்சியை வாழ்த்தி, குத்துவிளக்கை ஏற்றிவைத்தனர்..

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் செய்தி பிரிவு, வரைகலை அறை, ஒளிபரப்பு பிரிவு, செய்தி வாசிப்பு அரங்கம் உள்ளிட்டவற்றை பார்வையிட்ட முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் நியூஸ் ஜெ ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்..

Exit mobile version