நியூஸ் ஜெ செய்தி எதிரொலியாக உதகை கூடலூர் சாலையில் உள்ள செடிகளை அகற்றி பராமரிக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகை, கூடலூர் தேசிய நெடுஞ்சாலை மிகவும் பழுதானநிலையில் குண்டும் குழியுமாக காட்சியளிப்பதாகவும், சாலையோர வளைவுகளில் காணப்படும் காட்டுச்செடிகளால் அதிக விபத்துகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக உதகை- கூடலூர் முதல் நடுவட்டம் வரை சாலைகளை சீரமைத்தும், சாலை ஓரங்களில் இருந்த செடிகளை அகற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு, புதிய திசைகாட்டி பலகைகளும் வைக்கும் பணிகளில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர். நெடுஞ்சாலை துறையினரின் நடவடிக்கைக்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.